...
உலகம்

டெல்லி முதலமைச்சருக்கு கொவிட்.

இந்தியாவின் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

சிறு நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தமக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கடந்த மூன்று நாட்களாகப் பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகளில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது

இந்நிலையில் அவர் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, டெல்லியில் நேற்றைய தினம் 4,099 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

டெல்லியில் ஒமைக்ரொன் வைரஸ் திரிபின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

டெல்லி கடந்த டிசம்பர் மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனைகளில் 81 சதவீதமானோருக்கு ஒமைக்ரொன் வைரஸ் திரிபு தொற்று உறுதியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen