மலையகம்

டிக்கோயா கால்வாயில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

 

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்ட பிரிவில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் காணாமல்போன ஒருவரின் சடலமே இன்று பகல், ஹட்டன் ஆற்றுக்கு அருகில் உள்ள கால்வாயிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், டிக்கோயா தோட்டப பிரிவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய ராமசாமி சிவாநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த கால்வாயில் சடலமொன்று இருப்பதை அவதானித்த பிரதேச மக்கள் வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஹட்டன் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button