...
செய்திகள்

டிக்கோயா கிளங்கன் வைத்திய சாலைக்கு வைத்திய உபகரணங்கள்…

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து
செல்லுகின்றது.
இந்நிலமையை கருத்திற்கு கொண்டு டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின்
வைத்தியர்களின் வேண்டுகோளுக்குயினங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்
செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நிதி ஒதுக்கீட்டில்
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டில்களும்,
மற்றும் வைத்தியசாலை உபகரணங்களும் நேற்று (19/08) வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ்,நோர்வூட் பிரதேச
சபை தவிசாளர் ரவி குழந்தைவேல், பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரம் அவர்களின்
பிரத்தியோக செயலாளர் ராஜன், மனித வள அபிவிருத்தி நிதியத்தின் அட்டன் பிராந்திய
இயக்குனர் நாரத மற்றும் வைத்தியசாலை பிரதான வைத்தியர்கள் உட்பட அதிகாரிகளும்
கலந்துக் கொண்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen