...
செய்திகள்நுவரெலியாமலையகம்

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வெளி நோயாளர் ஆரம்ப பரிசோதனை பிரிவு திறந்து வைப்பு!

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெளி நோயாளர் ஆரம்பபிரிவு பரிசோதனை பிரிவு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

டிக்கோயா வெளிநோயாளர் பிரிவுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாகவும்,வைத்தியசாலையில் தங்கி நின்று சிக்சைப்பெற்றுக்கொள்பவர்களின் வசதி கருதியும் குறித்த பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவுவின் மூலம் நோயாளர்களின் நோய் மற்றும் பரிசோதனை முடிவுகள் விரைவாக செய்யப்படும் இதனால் கால தாமதத்தை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் நோயாளர்கள் பரிசோதனைகள் மூலம் இனங்கண்டு அவர்களை உரிய வாட்டுக்களுக்கும் சிகிச்சைக்கும் உட்படுத்த முடியுமென வைத்திய அதிகாரி தெரிவித்தார். இதன் போது வைத்திய உபகரணங்கள் சில வழங்கி வைக்கப்பட்டன.

– K.Sundarlingam

Related Articles

Back to top button


Thubinail image
Screen