மலையகம்

மழைக் காரணமாக சேதமடைந்த பழைய லயன் வீடுகள் – ஒருவர் வைத்தியசாலையில்

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்டத்தில் 26.04.2018 அன்று விடியற்காலை பழைய லயன் குடியிருப்பில் திடீர் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 24 வீடுகள் கொண்ட லய தொடர் குடியிருப்பில் 5 வீடுகளுக்கு வெடிப்புகளும்,சேதங்களும் ஏற்பட்டுள்ளது.

இன்று விடியற்காலை 5 மணியளவில் இடம்பெற்ற குறித்த அனர்த்தம் முதலில் நில அதிர்வு என மக்களால் கூறப்பட்டதாகவும் , குறித்த அனர்த்தத்தின் போது வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகியதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தர்ப்பத்தில் ஒரு வீட்டில் உறங்கி கொண்டிருந்த ஒருவரின் மீது சுவர்கள் இடிந்து விழுந்ததில் அவர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அதிர்வு மற்றும் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button