நுவரெலியாமலையகம்

டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை; வைத்தியர்கள் உட்பட 17 பேருக்கு கொவிட்

டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் நான்கு வைத்தியர்கள் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலை ஊழியர்கள் 07 பேர்,தாதியர்கள் 06 பேர் மற்றும் 04 வைத்தியர்களுமாக 17 பேருக்கே கொரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வைத்தியசாலையில் கொரோனா நோயாளர் வார்ட்டில் அதிகளவான தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன் வைத்தியசாலையில் வைத்திய சேவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொற்றுக்குள்ளான 17 பேரையும் கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களோடு தொடர்பினை பேணியவர்களை சுயதனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொது சுகாதர அதிகாரிகள் தெரிவித்தனர் .

இதேவேளை பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு சிக்சைக்காக வந்த நோயாளர்களில் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பதாக பொகவந்தலவை வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். சிகிக்சைக்காக வருகைத்தரும் நோயாளர்களுள்கு கடந்த இரண்டு தினங்களில் மேற்கொண்ட என்டிஜன், பி.சி.ஆர் பரிசோதனைகளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணும் தொற்றாளர்களை அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அறிவித்துள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen