செய்திகள்

டீஷல் ஏற்றிச் சென்ற கொள்கலனை மறித்து பெற்றோல் கோரிய மக்கள்.

பதுளையில் இருந்து படல்கும்பரை நோக்கி சென்ற டீஷல் கொள்கலனை செல்லவிடாது பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பசறை மட்டக்களப்பு பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொள்கலனை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு மிகவிரைவில் பெற்றோலை பெற்றுத் தருவதாக வாக்களித்ததன் பின்னரே டீஷல் ஏற்றிய கொள்கலன் அவ்விடத்தில் இருந்து செல்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களினால் இடமளிக்கப்பட்டது.

இருப்பினும் பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக பெற்றோலை பெற்றுக் கொள்வதற்காக வாகன சாரதிகள் வாகனங்களுடன் காத்திருக்கின்றனர். சுமார் 7 நாட்களாக பசறை எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இரண்டுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராமு தனராஜா

Related Articles

Back to top button