தொழில்நுட்பம்

டுவிட்டர் பயனர்கள்க்கு பேஸ்புக் போன்று புதுவசதி விரைவில்!

சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பயன்பாட்டில் இருப்பது பேஸ்புக். இதேபோல் பிரபலங்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வலைத்தளமாக டுவிட்டர் விளங்குகிறது. பேஸ்புக்கில் இருப்பது போன்று பிறருடன் சாட் செய்யும் வசதி டுவிட்டரிலும் இருக்கிறது.

இந்நிலையில் ஆன்லைன் பயனர்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள புதுவசதியை டுவிட்டர் அறிமுகம் செய்யவுள்ளது. இதுதொடர்பாக டுவிட்டர் சிஇஓ ஜாக் டோர்சே தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், மைக்ரோ பிளாக்கிங் பிளாட்பார்ம் விரைவில் புதிய அப்டேட்களை பெறவுள்ளது. புத்தம் புதிய டுவிட்டர் அம்சங்களுடன் விளையாட இருக்கிறீர்கள். அதாவது யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள்.

எளிதில் படிக்கும் வகையிலான உரையாடல்கள் ஆகியவை இதற்கு உதாரணங்கள் ஆகும். இந்த வசதி ஆன்லைனில் இருப்பவர் உடன், எளிதில் தொடர்பு கொள்ள உதவும். உரையாடல்களை தொடர்ச்சியாக கவனிக்க உதவும்.

Related Articles

50 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button