காலநிலைசெய்திகள்

டெங்குவால் பாதிக்கப்பட்டோர் விபரம் வெளியானது..

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரத்து 894 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதன்பிரகாரம் இந்த மாதத்தில் 4 ஆயிரத்து 155 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால் 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மழையுடனான வானிலையால் நுளம்புகள் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன்காரணமாக பொதுமக்கள், தமது சுற்றுசூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button