மலையகம்

டெங்கு நோய் தொடர்பில் பொது மக்களை அறிவுறுத்தும் முகமாக ஹட்டனில் பேரணி

நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பினை தொடர்ந்து பொது மக்களை அறிவுறுத்தும் முகமாக ஹட்டனில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணி டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் கே.பாலகிருஸ்ணன் தலைமையில் இன்று ஹட்டன் கொமர்ஷல் வங்கிக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை ஹட்டன் ரிகோபோத் பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கழிவு பொருட்களை மீள் சுழற்சி செய்து எவ்வாறு சுற்றுப்புற சூழலை அழகுபடுத்தலாம் என்பது தொடர்பாக செயல்முறை செயற்பாடுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களும், பெற்றோர்களும் வீதியின் இரு மருங்கிலும் காணப்படும் பொலித்தீன் மற்றும் ஏனைய கழிவு பொருட்களையும் அகற்றியுள்ளனர்.

இதில், டிக்கோயா நகர சபை அதிகாரிகள் மற்றும் அம்பகமுவ பிரதேச சபை அதிகாரிகள், பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள்  என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com