உலகம்செய்திகள்

டெல்டாவை எதிர்க்கும் ஜான்சன் & ஜான்சன்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் பல நாடுகள் பல்வேறு விதமான தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி சமீபத்தில் அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாடு துறையால் அங்கீகரிக்கப்பட்டது. மற்ற தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களுக்கு பிறகே உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலையில் இந்த தடுப்பூசி ஒரே டோசில் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வேகமாகப் பரவி வரும் டெல்டா வகை கொரோனா நோய்த்தொற்று மற்றும் சார்ஸ் வைரஸ் எனப்படும் தீவிர சுவாசக் கோளாறு நோய்களுக்கு எதிராக வீரியத்துடனும் மற்றும் நீடித்து செயல்படுவதை தரவுகள் நிரூபிப்பதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button