செய்திகள்

‘டெல்டா’வை விட ஆபத்து மிக்க ‘லெம்டா’ குறித்து இலங்கை சுகாதார பணிப்பாளர் கூறியது என்ன.?

லெம்டா எனப்படும் புதிய கொரோனா திரிபு அபாயம் இலங்கைக்கு ஏற்படக்கூடுமென சுகாதார தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய சவால்களை முகங்கொடுக்க வேண்டிய ஏற்பட்டாலும் மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு அமையவே இதனைக்கட்டுப்படுத்த முடியுமென பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,472 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 238,131 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 267,433 ஆகும். அதேபோன்று 3 ஆயிரத்து 313 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது.

வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதனால் மக்கள் மிகவும் அவதானமாகவும் சுகாதார வழிமுறைகளைப் பேணியும் நடந்து கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

தற்போது உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வரும் டெல்டா திரிபை விட பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புதிய கொவிட்-19 வைரஸ் திரிபு தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்த கொவிட்-19 திரிபுக்கு ‘லெம்டா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த உருமாறிய கொரோனா லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Image

Related Articles

Back to top button