...
செய்திகள்

டெல்டாவை விட வீரியம் மிக்க கொவிட் வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் அடையாளம்!

டெல்டா திரிபை விடவும் வீரியமிக்க புதிய கொவிட் வைரஸ் திரிபு ஒன்று தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.

பீ.1.1.529 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த வைரஸ் திரிபானது டெல்டா திரிபை விடவும் ஐந்து மடங்கு வீரியமிக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கண்டறியப்பட்ட இந்த திரிபானது, இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள திரிபுகளில், அதிக வீரியம் கொண்டது என விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அதேநேரம், இது மிகவும் வேகமாக பரவக்கூடியது என மற்றுமொரு விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்கா, ஹெங்கொங் மற்றும் பொத்ஸ்வானா முதலான நாடுகளில் இந்த புதிய திரிபுடன், 59 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen