செய்திகள்

டெல்டா வைரஸ் நாட்டின் பல பகுதிகளிற்கும் பரவியிருக்கலாம்.!

டெல்டா வைரஸ் ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிற்கும் பரவியிருக்கலாம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் எம் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்ட பலர் அடையாளம் காணப்படாத நிலையில் சமூகத்திற்குள் நடமாட கூடும் என அவர் தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும் வீதிகளில் பொதுமக்களை காணமுடிந்தது என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக டெல்டா வைரஸ் சமூக்தில் பரவியிருப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button