உலகம்
டெல்லியில் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு!

டெல்லியின் முண்ட்காவில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கட்டடத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
மின்ஒழுக்கு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.