உலகம்செய்திகள்

டெல்லியில் பொதுமுடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு

டெல்லியில் பொதுமுடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கடந்த வாரத்தில் மூடப்பட்ட மெட்ரோ நிலையங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முடக்கல் காலப்பகுதியில் கொவிட் தொற்று நிலைமை சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களில் பெற்றுக்கொண்ட சிறந்த பெறுபேற்றை இழக்கத் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய 24 ஆம் திகதி வரை முடக்கல் அமுலில் இருக்கும் என அவர் அறிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com