...
விளையாட்டு

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

137 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து இலக்கைக் கடந்தது.

இந்த வெற்றியினை அடுத்துத் தரப்படுத்தலில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 புள்ளிகளுடன் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen