...
விளையாட்டு

டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் மொஹமதுல்லஹ்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் மொஹமதுல்லஹ் அறிவித்துள்ளார்.

35 வயதான மொஹமதுல்லஹ் 2009 ஆம் ஆண்டில் தனது டெஸ்ட் பயணத்தை ஆரம்பித்தார்.

அவர் 50 போட்டிகளில் விளையாடி, 33.49 சராசரியில் 2,914 ஓட்டங்களை எடுத்தார், இதில் 5 சதங்கள் மற்றும் 16 அரைசதங்கள் என்பன அடங்கும்.

அதேநேரம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 43 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஆறு டெஸ்ட் போட்டிகளுக்கு பங்களாதேஷின் தலைவராகவும் இருந்துள்ளார்.

இது தொடர்பில் ஒரு அறிக்கையில் கூறியுள்ள மொஹமதுல்லஹ்,

நான் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டி-20 சர்வதேச போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவேன். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் எனது நாட்டிற்காக எனது சிறந்த திறனை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen