மலையகம்

மலையக சிறுவர்களுக்கான மற்றுமொரு களம்.”டைனி பேர்ட்ஸ்” நாடத்தும் முள்பள்ளிச் சிறார்களுக்கான ஓவிய போட்டி!

டைனி பேர்ட்ஸ்’ வருடாந்தம் நடத்தும் வர்ணம் தீட்டும் போட்டியை இவ்வருடமும் நடத்தவுள்ளது. தனது பத்தாவது வருடத்தில் கால் பதித்திருக்கும் ‘டைனி பேர்ட்ஸ்’ முள்பள்ளிச் சிறார்களின் எண்ணங்களை வண்ணங்களால் வெளிக்கொணரவும், அவர்களுள் மறைந்திருக்கும் கலை ஆற்றலை ஓவியத்திறமைகளின் ஊடாக ஊக்குவித்து அவர்களுக்கான அங்கீகாரத்தினை வழங்குவதற்காகவே இவ்வாறானதொரு போட்டிநிகழ்வை நடத்தி வருகின்றோம்.

2009ஆம் ஆண்டு 750 சிறுவர்களின் பங்குபற்றுதலோடு இந்த போட்டி ஆரம்பிக்கப்பட்டது. 2009இல் இருந்து 2017 வரையான காலப்பகுதியில் சுமார் 18473 சிறுவர்கள் இப்போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர். இவர்களில், 1281 சிறுவர்கள் தங்கப் பதக்கங்களையும், 1198 சிறுவர்கள் வெள்ளிப் பதக்கங்களையும், 1257 சிறுவர்கள் வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.
முன்பள்ளிச் சிறுவர்களுக்கும் வர்ணங்களுக்குமான தொடர்பு அத்தியாவசியமானதொன்று என்ற வகையில், பிரமிட் பப்ளிகேஷன், 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு முன்பள்ளிச் சிறுவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்கள், வர்ணம் தீட்டும் புத்தகங்கள், கைவேலைப்பாடு புத்தகங்கள் வெளியிட்டு வரும் நிறுவனமாகும். முன்பள்ளிச் சிறுவர்களுக்கு ஏற்ற தரமான புத்தகங்களை வழங்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டு ‘Tiny Birds’… எனும் பதிப்பாக வெளிவந்தது.

இந் நிறுவனமானது, சிறுவர்களுக்கான புத்தகங்களை வெளியிட்டு அவர்களின் பேராதரவைப் பெற்று அவர்களின் ஓவியத் திறமையை வெளிக்கொணரும் பொருட்டு, வர்ணம் தீட்டும் போட்டியொன்றை 2009ஆம் ஆண்டு தொடக்கம் நடாத்தி வருகின்றது. 2015ஆம் ஆண்டுவரை கொழும்பில் மட்டுமே நடைபெற்று வந்த போட்டிகளில், மலையகப் பிரதேசங்களைச் சேர்ந்த சிறுவர்களும் கலந்துகொண்டு தொடர்ச்சியாக முதல் 2 பரிசுகளை தட்டிச் சென்றனர். ‘இயற்கையோடு பிணைந்த’ மலையக சிறார்களது ஓவியத்திறமை வியக்க வைத்ததாக இருந்தமையினால் அவர்களுக்கென்று தனியாக போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்போட்டிகளில் பங்குபெறும் சிறுவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பரிசளிப்பு விழா கொழும்பில் இடம்பெற்றது. மலையகத்திலிருந்து சிறார்களை கொழும்புக்கு அழைத்து அத்தோடு இந்த போட்டிகளுக்காக 2 முறை தமது பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்து வரவேண்டிய நிர்ப்பந்தமும் பெற்றோர்களுக்கு இருந்தது. அதற்காக அவர்கள் அதிகமான பயணக் கஷ்டங்களையும் செலவுகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. அத்துடன் உரிய நேரத்திற்கு தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன், முன்பள்ளி ஆசிரியைகளும் பெற்றோர்களும், இப்போட்டிகளை மலையகத்திலும் நடத்தும்படியும் அதன் மூலம் இன்னும் அதிகமான சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொணர முடியும் என்று தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டதற்கிணங்க 2016, 2017ஆம் ஆண்டுகளில் Tiny Birds Colouring Contest போட்டிகள் மலையக மண்ணில் அவர்களது சொந்த ஊரில் நடைபெற்றன.

இப்போட்டிகளின் பரிசளிப்பு விழா ஹட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் மிகப்பிரமாண்டமாக – இடம்பெற்றது.
2015 வரை நடைபெற்ற போட்டிகளில் முதல் மூன்று இடங்களுக்கும் 6 பரிசுகளையே (மேல் பிரிவு 3, கீழ்பிரிவு 3) வழங்கப்பட்ட போதிலும் மலையகத்தில் நடைபெற்ற போட்டிகளில் மொத்தமாக 11 பரிசுகள் வழங்கப்பட்டு வெற்றியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. அதுபோல் இந்த ஆண்டு 10ஆவது முறையாகவும் நடைபெறும் Tiny Birds Colouring Contest பாடசாலை செல்லும் 1,2,3,4 ஆம் வகுப்பு சிறுவர்களும் கலந்துகொள்ளும் வாய்ப்பும் தற்போது கிடைத்துள்ளது. முந்தைய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற சிறுவர்களும், தமது ஓவியத் திறமையை வெளிக்கொணர சரியான களத்திற்காக காத்திருக்கும் சிறுவர்களும் இதில் கலந்துகொள்ளலாம்.

இந்த சின்னஞ் சிறிய வயதில் அவர்கள் பெறும் முதல் வெற்றியும் பரிசுகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் எதிர்கால கல்விக்கு சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. இப்போட்டியில் பங்கு பெற விரும்புபவர்கள் 0754- 293460/ 0774-184489 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button