...
உலகம்

டொமினிகன் குடியரசில் ஏற்பட்ட விமான விபத்தில் இசையமைப்பாளர் ஹெர்னாண்டஸ் உட்பட ஒன்பது பேர் உயிரிழப்பு!

டொமினிகன் குடியரசில் ஏற்பட்ட விமான விபத்தில், புவேர்ட்டோ ரிக்கன் இசையமைப்பாளர் ஜோஸ் ஏஞ்சல் ஹெர்னாண்டஸ் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில், அவசரமாக தரையிறங்கும் போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.

தனியார் விமான நிறுவனமான ஹெலிடோசா ஏவியேஷன் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் இறந்ததாகவும் ஆறு பேர் வெளிநாட்டினர் மற்றும் ஒருவர் டொமினிகன் எனவும் குறிப்பிட்டுள்ளது, மேலும், ஆறு பயணிகளின் தேசியம் தெரிவிக்கப்படவில்லை.

இதனிடையே, அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தையும் இருப்பதாக அவரது விளம்பரதாரர் கூறுகிறார்.

இதேபோல, ஹெர்னாண்டஸின் பங்குதாரர் மற்றும் அவரது மகனும் இறந்தவர்களில் அடங்குவதாகவும், இறந்தவர்களில் இருவர் நான்கு மற்றும் 13 வயதுடைய சிறார்கள் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen