உலகம்

ட்ரம்பின் பதவிக்கு ஆபத்து..

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், யுக்ரைன் ஜனாதிபதியும் பேசிய தொலைபேசி உரையின் விவரங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

இந்த தகவல்களைக் கொண்டு ட்ரம்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை அமெரிக்க நாடாளுமன்றம் தொடங்கவுள்ளது.

ஜனநாயக கட்சியின் உறுப்பினரும், முன்னாள் துணை ஜனாதிபதியுமான ஜோ பைடனின் செயற்பாடுகளை விசாரிக்க உக்ரைன் ஜனாதிபதி வாலடிமீர் செலன்ஸ்கியிடம் ஜூலை 25 ஆம் திகதி அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜோ பைடனின் மகன் உக்ரைன் எரிவாயு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
 

தனது அரசியல் எதிரியான ஜோ பைடனை களங்கப்படுத்தும் நோக்கில் உக்ரைனுக்கு வழங்கும் இராணுவ உதவியை நிறுத்தி வைத்தாக கூறப்படுவதை ட்ரம்ப் மறுத்து வருகிறார்
இதனிடையே ட்ரம்ப் மற்றும் வாலடிமீர் தொலைபேசி அழைப்பு, இந்த ஊழலை முதன் முதலில் வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதியின் செயற்பாடுகளில் பதவி நீக்கத்திற்கு வகை செய்கின்றஉத்தியோகபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் ஜனநாயக கட்சி தலைவரும், அவைத் தலைவருமான நான்சி பலோசி கடந்த செவ்வாய்கிழமை தொடங்கியுள்ளார்.

யுக்ரைன் ஜனாதிபதியோடு நடத்திய தொலைபேசி உரையாடலில் ஜோ பைடன் பற்றியும், அவரது மகன் பற்றியும் ட்ரம்ப் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
 

ஜோ பைடனின் செயற்பாட்டை சுட்டிக்காட்டி, உக்ரைன் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ட்ரம்ப் கூறியுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அத்துடன் அதனை நாங்கள் பார்த்துக் கொள்வோம். இந்த வழக்கு பற்றிய புலனாய்வை நாங்கள் செய்வோம் , என செலன்ஸ்கி தெரிவித்துள்ளமையும் வெளிவந்துள்ளது.

இந்நிலையிலேயே ட்ரம்பை பதவியிலிருந்து நீக்கும் முயற்சியில் அமெரிக்க நாடாளுமன்றம் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாடாளுமன்றத்தின் இந்த நடவடிக்கை வேடிக்கையாக உள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download