செய்திகள்

ட்ரோன் கெமரா ஊடாக கண்காணிப்பு ஆரம்பம்.!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் தரப்பினரை கண்டறிவதற்கு கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பிரதேசங்களிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இன்று முதல் ட்ரோன் கேமரா ஊடாக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த அக்டோபர் மாதம் முதல் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன், பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com