தகாத உறவினால் நடந்த விபரீதம்!

யட்டியாந்தோட்டை – அமனாவல கில்ம பகுதியில் பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நபரொருவர், அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது .
குறித்த சம்பவம் நேற்று(02 ) மாலை 4.30 மணியலவில் அமனாவல கில்ம பிரதேசத்தில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் தற்கொலை செய்து கொண்ட நபருக்கும் இடையே காணப்பட்ட தவறான உறவு இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் ரனால ஜல்தர பிரதேசத்தை சேர்ந்தவர் இரு குழந்தைகளின் தாய்(26 வயது) எனவும் , தற்கொலை செய்துகொன்றவர் அமனாவல கில்ம பிரதேசத்தை சேர்ந்தவர் (27 வயது) ஒரு குழந்தையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் குறித்து யட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.