மலையகம்

தங்களது பெற்றோர்களுக்காக ஆர்பாட்டத்தில் இறங்கிய தேயிலை எம் தேசம் உறுப்பினர்கள்.

 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலை நகரில் இன்று காலை பெருந்தோட்ட மக்களுக்கான சம்பள போராட்டம் இடம் பெற்றது.

இந்த போராட்டத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல சிவில் அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக தேயிலை எம் தேசத்தின் உறுப்பினர்கள் அதிகமாக கலந்துகொண்டு உணர்வு பூர்வமாக தங்களது பெற்றோர்களுக்கான நியாயமான சம்பள அதிகரிப்புக்காக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேயிலை எம் தேச உறுப்பினர்கள் மலையகத்தின் பல இடங்களிருந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

29 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button