செய்திகள்

தங்க பிஷ்கட்டுக்களை வெளியே எடுத்த வர முயன்றவருக்கு தண்டப்பணம்.?

இரட்டை குடியுரிமையுள்ள இலங்கையர் ஒருவரினூடாக 100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்து வர முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தீர்வையற்ற கடைத்தொகுதியொன்றின் ஊழியர் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த தீர்வையற்ற கடைத்தொகுதிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
image download