...
விளையாட்டு

தசுன் சானக்க மற்றும் ஹசான் திலகரட்ண ஆகியோருக்கு கொவிட் தொற்றுறுதி!

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்கவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹசான் திலகரட்ணவுக்கும் கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வரும் ஹசான் திலகரட்ணவுக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளின் போதே இவ்வாறு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தசுன் சானக்கவினால் விளையாட முடியும் எனவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen