...
உலகம்

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவா்கள் ரயிலில் பயணம் செய்வதற்குத் தடை

பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவா்கள் ரயிலில் பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று பரவல் குறித்து அந்த நாட்டின் தலைமை கொரோனா தடுப்பு அமைப்பு கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் நிலவி வரும் அலட்சியத்தைப் போக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, அக்டோபா் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும்.

இதற்கிடையே, பாகிஸ்தானில் கொரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 24 ஆயிரத்தைக் கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 86 கொரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். அதை அடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 24,004 ஆக உயா்ந்தது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 3,884 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,075,504 ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen