செய்திகள்

தடுப்பூசி வழங்கப்பட்டாலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்…

இலங்கையில் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டாலும் பொதுமக்கள் கண்டிப்பாக சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்று தேசிய தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டாலும் சுகாதார பழக்கவழக்கங்களை மறந்துவிடுவது கடுமையான குற்றமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button