செய்திகள்

தடுப்பூசி வழங்கும் திட்டம் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆரம்பம்.

இலத்தின் அமெரிக்க நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை
ஆரம்பமாகியுள்ளது.

மெக்சிக்கோவில் தாதியொருவர் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

Pfizer-BioNTech தடுப்பூசிகளில் மூவாயிரம் தொகுதியை மெக்சிக்கோ முதற்கட்டமாக
பெற்றுள்ளது.

அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவைத் தொடர்ந்து அதிக கொரோனா
உயிரிழப்புக்களை சந்தித்த நாடு மெக்சிக்கோ ஆகும்.

மெக்சிக்கோவைத் தொடர்ந்து ச்சிலி, கொஸ்டாரிக்கா ஆகிய நாடுகளும் தடுப்பூசி
வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

ரஷ்ய தயாரிப்பிலான ஸ்புட்னிக் வீ தடுப்பூசியை அடுத்த சில நாட்களில் நாட்டு
மக்களுக்கு வழங்குவதற்கு ஆர்ஜன்டீனா உத்தேசித்துள்ளது.

தலைநகர் Buenos Aires ஐ நேற்று மூன்று இலட்சம் தடுப்பூசி தொகுதிகள்
வந்தடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com