செய்திகள்நுவரெலியாமலையகம்

தடுப்பூசி வழங்குவதில் கொத்மலை பொது சுகாதார பிரிவில் அசமந்தப்போக்கு; மக்கள் அசௌகரியத்தில்.!

கொத்மலை பொது சுகாதார பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்த வரவழைக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்காமல் பலமணி நேரமாக காத்திருந்துஅசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்திற்கு பொறுப்பான பொது சுகாதார அதிகாரி காலை வேளையில் இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்படுமென வயதானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் ஊசி வழங்கும் பதிவு அட்டையிலும் குறிப்பிட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் காலை வேளையில் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வருகை தந்து தடுப்பூசி செலுத்தும் நிலையத்தில் காத்திருந்த போதும் தமக்கு தடுப்பூசிகள் வழங்கவில்லையெனவும், அதேநேரத்தில் குறித்த பொது சுகாதார பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி தன்னுடைய தனியார் சிகிச்சை நிலையம் ஒன்றில் மருந்து வழங்கி கொண்டிருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

டி.சந்ரு

Related Articles

Back to top button