விளையாட்டு

தடுமாற்றத்தில் நியூசிலாந்து..

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து ஓட்டங்களை பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில்  467 ஓட்டங்களை குவித்தது.
அவுஸ்திரேலியா சார்பாக மார்னஸ் லபுசெனே  63 ஓட்டங்களையும் முன்னாள் அணித்தலைர் ஸ்டீவன் ஸ்மித் 85 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் இன்றைய இரண்டாம் நாளில் அணித்தலைவர் டிம் பெய்ன் மற்றும் டிரவிஸ் ஹெட் ஆகியோர் ஆறாவது விக்கெட்டுக்காக 163 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

டிம் பெய்ன் 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும் சிறப்பாக  துடுப்பெடுத்தாடிய டிரவிஸ் ஹெட் சதத்தை பூர்த்தி செய்து 114 ஓட்டங்களை பெற்றார்.

நியூசிலாந்து சார்பாக பந்துவீச்சில் நீல் வோன்னர் 4 விக்கெட்டுக்களையும் டிம் சவுதி மூன்று விக்கெட்டுக்கயைும் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் வேகப்பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழந்தது.

அதன்பிரகாரம் நியூசிலாந்தின் முதல் இரண்டு விக்கெட்டுக்களும் 39 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டொம் புலுடல் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்த களமிறங்கிய அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்திருந்த போது இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

போட்டியில் அவுஸ்திரேலியா சார்பாக பெட் கம்மிங்ஸ் மற்றும் ஜேம்ஸ் பெட்டின்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என அவுஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.
அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடரானது ஐ.சி.சி யின் டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக  நடைபெறுகிறது.

Related Articles

Back to top button
image download