செய்திகள்

தடை செய்யப்பட்டது ‘பீஸ் டிவி’ அலைவரிசை..

இலங்கையில் இஸ்லாம் மத ​போதனைகளை ஒளிபரப்பிய ‘பீஸ் டிவி ‘ என்ற கேபள் தொலைக்காட்சி அலைவரிசையை நிறுத்துவதற்கு டயலொக், டெலிகொம் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

அதற்கமைய (30) நேற்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கேபள் தொலைக்காட்சி அலைவரிசை நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்படும் பீஸ் டிவி அலைவரிசையானது மத தீவிரவாதத்தை கற்பித்தல், அடிப்படைவாதத்தை பரப்புவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அலைவரிசையின் உரிமையாளர் வைத்தியரான சாகிர் அப்துல் கரீம் நைக் என்ற பிரபல தீவிரவாத மத போதனையாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button