மலையகம்

தந்தையை தடியால் அடித்து கொலை செய்த மகன்

நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காசல்ரீ பகுதியில் தந்தையை தடியால் அடித்து கொலை செய்யபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு 7.30 மணி அளவில் பதிவாகியுள்ளதாக காசல்ரீ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மகன் மனநோயாளி எனவும் மகனின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து காணபட்டமையினால் தந்தை நோட்டன்பிரிஜ் பொலிஸ் நிலையத்தில் தனது மகன் மீது முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், ஆத்திரம் அடைந்த மகன் வீட்டில் தனது தந்தை தனிமையில் இருந்த வேளை, தந்தையின் தலை பகுதியை தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தந்தையான 76 வயதுடைய ஏ.ஜீ. ஜயநந்த என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மகன் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யபட்ட சந்தேக நபர் இன்று (28) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோட்டன்பிரிஜ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button