சமூகம்
தந்தையை மகள் தடியொன்றால் தாக்கி கொலை
அவிசாவளை – சமருகம பிரதேசத்தில் தனது தந்தையை அவரது மகள் தடியொன்றால் தாக்கி கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சம்பவம் தொடர்பில் குறித்த பெண் அவிசாவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.