அரசியல்செய்திகள்

தனக்கு ஒதுக்கப்பட்ட சுமார் ஆறு கோடி ரூபா நிதி திறைசேரியால் மீளப் பெறப்பட்டுள்ளது- அரவிந்த குமார்?

ஆட்சி மாற்றத்தின் பின்னர் தனக்கு ஒதுக்கப்பட்ட சுமார் ஆறு கோடி ரூபா நிதி திறைசேரியால் மீளப்
பெறப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது திறைசேரியின் திட்டமிட்ட செயல் எனவும் இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு
கடிதம் மூலம் தெரியபடுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி இது தொடர்பில் சிந்தித்து பொறுத்தமான நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தனக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி இவ்வாறு மீள பெறப்பட்டுள்ளமை சம்பந்தமாக பதுளை மாவட்ட
செயலகத்திற்கு திறைசேரியின் செயலாளர் சுற்றரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தமது நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பிரதேச
செயலாளர்கள் தற்போது பல்வேறு கெடுப்பிடிகளை பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தனக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் எஞ்சியுள்ள ஆறு கோடி ரூபாவை மீள் பெறுவது
பொருத்தமான நடவடிக்கையாக அமையாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆகவே ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிட்டு மீண்டும் குறித்த ஆறு கோடி ரூபா நிதியை மக்கள் தேவைக்காக பயன்படுத்த திறைசேரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Back to top button