மலையகம்

தனது மரக்கறி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு நடந்த சோகம்

தலவாக்கலை – சின்ன கட்டுக்கலை தோட்டப்பகுதியில் இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சின்ன கட்டுக்கலை தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி இருவரில் கணவர் உயிரிழந்துள்ளதோடு, மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

கணவனும், மனைவியும் தனது மரக்கறி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து இவர்களை கொட்டியுள்ளது.

குளவி கொட்டியதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர்கள், உடனடியாக லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் கணவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி சுப்பிரமணியம் (வயது -72) என தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button