...
செய்திகள்

தனது பஸ் வண்டியின் சில்லுக்கே சிக்குண்டு உயிரிழந்த சாரதி; தெஹியோவிட்டயில் இடம்பெற்ற சோகம்!

தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெஹியோவிட்ட பழைய பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டி ஒன்று இன்று காலை 5.30 மணி அளவில் ஓட்டுனர் பஸ் செலுத்துவதற்கு முயற்சித்தபோது பஸ் வண்டியின் ஸ்டார்ட் செயல்படாத நிலையில்; பஸ் வண்டியின் சாரதி கோளாரினை திருத்த முற்பட்டபோது பஸ் வண்டிக்கு அடியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கலபிட்டமட இம்புள்கோட பிரதேசத்தை சேர்ந்த மெடிவில ஆசாரிகே சானக துலிப் விஜேவங்ச 25 வயதுடைய இளைஞனாவான்.

மேலதிக விசாரணை தெஹியோவிட்ட பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் சடலம் மரண பரிசோதனைக்காக அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Avissawella – K.Yugesh Nathan

Related Articles

Back to top button


Thubinail image
Screen