செய்திகள்மலையகம்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொட்டியாகல தோட்டத்தில் மேலும் தொற்றாளர்கள் அதிகரிப்பு

தனிமைப்படுத்தப்பட்ட பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகல தோட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த தோட்டத்தில் 115 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 35 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதையடுத்து, குறித்த தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button