தனிமைப்படுத்தப்பட்ட யாழ் நகர திரையரங்கம்.

uthavum karangal

கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள திரையரங்கம்
ஒன்று சுகாதார பிரிவினரால் இன்று புதன்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.

விஜயின் மாஸ்டர் திரைப்படம் உலகளாவிய ரீதியில் வெளியாகியுள்ளது. இந்நிலையில்
இலங்கையில் இன்று அதிகாலை முதல் திரையரங்குகளில் திரையிடப்பட்டன.

அதிகாலை முதல் காட்சியை பார்க்க என நேற்று நள்ளிரவு முதல் இரசிகர்கள் யாழ்
நகர் பகுதிகளில் குவிந்து, நகரில் உள்ள திரையரங்குகளின் முன்பாக
காத்திருந்தனர்.

அதிகாலை காட்சி திரையிடப்பட்டபோது ரசிகர்கள் பலரும் முண்டியடித்து டிக்கட்
கொள்வனவில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின்
பிரகாரம் யாழ்.நகர் மத்தியில் அமைந்துள்ள திரையரங்கம் 14 நாட்கள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்