கண்டிநிகழ்வுகள்மலையகம்

தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட மக்களுக்கு உதவிக்கரம்.

கொவிட் 19 நோய்த் தொற்று பரவல் நிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில்
நாவலப்பிட்டிய பொலிஸ் அதிகார எல்லைக்குட்பட்ட கெட்டபுலா மத்திய பிரிவு கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது.

இப் பிரிவில் ஏறக்குறைய 180 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இத் தகவல் அறிந்த கொழும்பு மார்ல்போ நிறுவன உரிமையாளர் திரு முத்துவேலு மணிமுத்து அவர்களும் கண்டி தமிழ் வர்த்தகர் சங்கத்தினரும் உரிய தரப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி இக் குடும்பத்தவர்களின் தனிமைப்படுத்தல் கால குறைபாடுகளைக் கேட்டறிந்தனர்.

பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு அம் மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு நிவாரணம்
வழங்கும் வகையில் ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதுடன் அப்பொருட்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு திரு முத்துவேலு மணிமுத்து அவர்களினதும் கண்டி தமிழ் வர்த்தகர் சங்கத்தினரதும் பங்கேற்பில் 11.07.2021 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.

மேலும் அன்றைய தினம் கெட்டபுலாவில் அமைந்துள்ள பௌத்த விகாரை மற்றும்
நாவலப்பிட்டிய வரகாவையில் அமைந்துள்ள ஸ்ரீ சுதர்மாராமய பௌத்த விகாரை ஆகிய இரு
விகாரைகளுக்கும் நிவாரணப் பணிக் குழுவினர் விஜயம் செய்து உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கியதுடன் நல்லாசிகளையும் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் தொடர்ச்சியாக நாவலப்பிட்டிய – தொலஸ்பாகை வீதியில் 5 கி.மீற்றர் உட்செல்ல ஷெம்ரொக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் அரசாங்க முதியோர் இல்லத்தினருக்கும் இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button