செய்திகள்

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய 253 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணிமுதல் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 253 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் 54,612 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மேல் மாகாண எல்லைகளில் மாகாண எல்லைகளை கடக்க முற்பட்ட 1,220 வாகனங்களில் பயணித்த 2,411 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவற்றில் 361 வாகனங்களில் பயணித்த 479 நபர்கள் கடுமையாக எச்சரிக்கைப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் நுழையும் போது புறப்படும் இடம் குறித்து வழங்கப்பட்ட தகவல்களுக்கு இணங்காத சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகளையும் சட்டமாக முன்னெடுப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.

Related Articles

Back to top button
image download