செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பின்பற்றி மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரேனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று (20) இரவு 10.00
மணி முதல் அழுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மலையகத்திலும்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று (21) மலையகப்பகுதிகளில் வியாபார நிலையங்கள் உட்பட அரச மற்றும்
அரசசார்பற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. மக்கள் அவரச தேவை
தவர்ந்ந ஏனைய எந்த தேவைக்கும் வெளியில் வராமல் வீடுகளிலேயே உள்ளனர். சில
தோட்டங்களில் மக்கள் தாங்களின்; தொழில்களில்; ஈடுப்பட்டு வருகின்றனர். அதன்
ஒரு கட்டமாக இன்று (21) புஸ்ஸல்லாவ நகர் முற்றிலும் மூடப்பட்டு இருந்தது
பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பும் பலப்படுத்து இருந்தது.

எது எவ்வாறாயினும் மக்கள் இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பின்பற்றி
தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

பா.திருஞானம்

Related Articles

Back to top button


Thubinail image
Screen