செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 35 பேர் கைது…

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 35 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக கவசம் அணியாமை , சமூக இடைவௌியை பேணாமை உள்ளிட்ட ஒழுங்கு விதிகளை மீறியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இதுவரை ஆயிரத்து 740 பேர் வரை இந்த சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோம்பர் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button