செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினால் 10 ஆயிரம் ரூபா அபராதம் / 6 மாத சிறைத்தண்டனை

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினால் நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதோடு 6 மாத சிறைத்தண்டனை நீதிமன்றத்தால் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 298 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 48,542 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர்களில் 41,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோருக்கு எதிராக வழக்கு எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலிலேயே உள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button