செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 4,857 பேர் இதுவரை கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 4,857 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இரவுவேளைகளில் விருந்துபசாரங்கள் மற்றும் கேளிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதற்கமைய நேற்றைய தினத்திலும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரையில் 4,857 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com