செய்திகள்

தனிமைப்படுத்தல் தண்டனையாக அமைய கூடாது.!

பிணையில் விடுவிக்கப்படுவோரை பலவந்தமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தடுத்துவைக்க நடவடிக்கை எடுத்தல் சட்டவிரோதமானது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் செயற்பாடு நீதிமன்றங்களை அவமதிக்கும் வகையில் உள்ளது. அமைதியாக எதிர்ப்பை வெளியிடும் உரிமையை பயன்படுத்துவோரை கைதுசெய்தல், தடுத்துவைத்தலிலிருந்து விலகியிருக்கும் படி பொலிஸாருக்கு ஆலோசனை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் ரஜீவ் அமரசூரிய ஆகியோரின் கையொப்பத்துடன் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகின்றவர்களுக்கு மாத்திரமே தனிமைப்படுத்தல் பொருந்தும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button