தனிமைப்படுத்தல் தளர்த்தப்படுவது பொதுமக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு

uthavum karangal

மக்கள் ஒத்துழைப்பு வழங்குமிடத்து , முடக்கப்பட்ட பகுதிகளை விரைவில் வழமைக்கு
திரும்​ப முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித்
ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் 24 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த பகுதிகளில் உள்ள மக்கள் தற்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைய
செயற்பட்டு வருவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர்
சுட்டிக்காட்டினார்.

அந்த பகுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுபாட்டுக்கும் இவர்கள்
கட்டுப்பட்டு செயற்பட்டு வருவதுடன் , தொடர்ந்தும் இவ்வாறு செயற்படும்
பட்சத்தில் அந்த பகுதிகளையும் வழமைக்கு கொண்டுவரமுடியும் எனவும் பொலிஸ்
ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்