செய்திகள்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 368 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 368 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குளியாப்பிட்டிய பகுதியில் 117 பேரும், கண்டியில் 51 பேரும், கம்பஹாவில் 31 பேரும் என அதிகளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 50,749 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button