செய்திகள்

தனிமைப்படுத்தல் விதிமீறலுக்காக 54 பேர் கைது.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 54 பேர் பேர் கடந்த 24 மணித்தியாலங்களில்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக கவசம் அணியாமை, சமூக இடைவௌியை பேணாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்
இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன இதனை
உறுதிப்படுத்தினார்.

கடந்த அக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இவ்வாறான சம்பவம்
தொடர்பில் ஆயிரத்து 794 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை மீறி செயற்படுவோரை கைது செய்வதற்கான
நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளகர்.

நாட்டிலுள்ள 12 பொலிஸ் பிரிவுகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தங்களின் வீடுகளிலேயே
நத்தார் பண்டிகையை கொண்டாடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கோரிக்கை
விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com