செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

தனியார் துறையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு
கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டாலோ அல்லது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலோ குறித்த ஊழியருக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தனியார் துறையின் 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களினதும் அரச கூட்டுத்தாபன மற்றும் நியாயாதிக்க சபைகள் உள்ளிட்ட ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செலுத்தும் அனைத்து உறுப்பினர்களினதும் தொழில் பாதுகாக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தொழிலுக்கு வர முடியாமல் வீடுகளில் குறிப்பிட்ட காலம் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு சம்பளத்தில் 50 சதவீதத்தை செலுத்துவதற்கும் தொழில் திணைக்களமும் முதலாளிமார் மற்றும் தொழிற்சங்கங்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு நிறுவனம் கொரோனா பரவல் காரணமாக பல வாரங்கள் மூடப்பட்டாலும் அதன் ஊழியர்களுக்கு கட்டாயம் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக ஒரு நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரம் ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் 14 ஆயிரத்து 500 ரூபாவை செலுத்த வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏதேனும் ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காவிட்டால் அது குறித்து தொழில் அமைச்சுக்கு அறிவிக்க முடியும் என தொழில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com